Home » News » போராடி வென்றது ஆஸ்திரேலியா – 5-வது ஒருநாள் போட்டி

போராடி வென்றது ஆஸ்திரேலியா – 5-வது ஒருநாள் போட்டி

தென் ஆப்ரிக்க அணியுடனான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில், 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதியது. நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 3-1 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

இந்த நிலையில், சம்பிரதாயமான கடைசி போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 280 ரன் குவித்தது. குவின்டான் டி காக் 107 ரன் (123 பந்து, 14 பவுண்டரி), ரோஸ்ஸோ 51, பெஹார்டியன் 63, அம்லா, பார்னெல் தலா 18 ரன் எடுத்தனர்.

மழை காரணமாக சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டதால், டி/எல் விதிப்படி ஆஸ்திரேலியா 48 ஓவரில் 275 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 47.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன் எடுத்து வென்றது. வார்னர் 21, பிஞ்ச் 76 (67 பந்து, 11 பவுண்டரி), வாட்சன் 82 (93 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டீவன் ஸ்மித் 67 ரன் (74 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர்.

43.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்திருந்த ஆஸ்திரேலியா மேற்கொண்டு 3 ரன் மட்டுமே சேர்ந்த நிலையில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேக்ஸ்வெல் 7, கேப்டன் பெய்லி 4, மேத்யூ வேட் 3, கம்மின்ஸ் (டக் அவுட்) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். பாக்னர் 6, ஸ்டார்க் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ராபின் பீட்டர்சன் 4, மார்கெல் 2, அப்பாட், பார்னெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற ஆஸ்திரேலியா 41 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தென் ஆப்ரிக்க வீரர் டி காக் ஆட்ட நாயகன் விருதும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus