ஈழ மக்களுக்கு இந்தியா செய்த துரோகச்செயல்
யாழில் இருந்து, பிள்ளை வாழ்.
விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டுந்தார் நடிகை குஷ்பு. இந்த தீவிரவாதம் உருவானதற்கு முதல் காரணமே இந்தியா தான் என்பது யாவரும் அறிந்த விடயமே. அப்போது இந்திய பிரதமரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான இந்திரா காந்தி எங்கள் தமிழ் இளைஞர்களை கடல் கடந்து வரச் சொல்லி ஆயுதமும் கொடுத்து, பயிற்சியும் கொடுத்து இலங்கை அரசுடன் போராடவைத்ததே இந்தியா அரசு.
விடுதலைப்புலிகல் இருக்கும் வரை இந்தியப் பெருங்கடலில் அச்சமும், அச்சுறுத்தலும் இருக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளை அழித்து ஐந்து வருடத்தில் இந்தியாவுக்கு சீனாவால் அச்சுறுத்தல் எற்பட்டுள்ளது. எங்கள் தமிழ் இளைஞர்கள் ஈழ விடுதலைக்காக போராடியவர்கள் அவர்கள் எந்தவொரு தீவிரவாத செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது அணைவரும் அறிந்த உண்மை.
ஆனால் இந்திய அரசு விடுதலைப்புலிகலளை தீவிரவாத அமைப்பு என்று உலகம் முழுவதும் சித்தரித்தது ஆனால் உண்மையில் அவர்கள் ஈழ விடுதலைப் போரளிகள் இலங்கையில் போர் குற்ற விசாரனை நடத்தவிடாது இந்தியாவே தடுத்து வருகிறது. இந்தியாவே பொறுப்பேற்று ஈழ மக்களுக்கு உருமையைப் பெற்றுக் கொடுப்பதே இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்பாகும்.