Home » Asia News » முரளிதியோரா திடீர் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

முரளிதியோரா திடீர் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெட்ரோலியம் மற்றும் கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக இருந்த முரளிதியோரா இன்று அதிகாலையில் திடீரென காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர், காங்., தலைவர் சோனியா, திக்விஜயசிங் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று பார்லி., குளிர் கால கூட்டத்தொடர் துவங்கவிருந்த நிலையில் இவர் காலமானதால் இரு அவைகளும் இவருக்கு இரங்கல் தெரிவித்து ஒத்தி வைக்கப்படும் என தெரிகிறது. நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக இவரது குடும்ப வட்டாரம் தெரிவிக்கிறது. முரளிதியோரா ( 77) மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர். இவர் மும்பை மேயர், செஞ்சிலுவை சங்கம், சர்வதேச பார்லி., உறுப்பினர்கள் இயக்கத்தின் சேர்மன், மும்பையின் காங்., தலைவராக 22 வருடம் என பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ளார்.

இவரது மறைவு குறித்து தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும், இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். தியோராவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.தியோராவின் இழப்பு தமக்கு தாங்க முடியாத துக்கத்தை தந்துள்ளதாக சோனியா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

காங்., மூத்த தலைவர் திக்விஜயசிங் தனது டுவிட்டரில், முரளி தியோரா காங்கிரஸ்சில் பல்வேறு நண்பர்களை பெற்றவர். தேச பக்தியும், காங்கிரஸ் மீது பெரும் பற்றும் கொண்ட இவரது இழப்பு இது காங்கிரசுக்கு மட்டுமல்ல எனக்கு தனிப்பட்ட இழப்பும் கூட. அனைவரது மதிப்பையும் பெற்ற தியோரா இழப்பு ஈடு செய்ய இயலாது. அவரது மறைவால் காங்., எதிர்காலத்தில் அவரது ஆலோசனையை இழந்து விட்டது. இவரது குடும்பத்தினருக்கு தங்களின் ஆறுதலை தெரிவித்து கொள்கிறறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus