எங்கள் தமிழுக்காக உயிர் ஈர்த்த அன்பு செல்வங்களுக்கு எமது காணிக்கை
ஓவ்வொரு வீட்டிலும் பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய சிறு கதை
பாட்டி : ஒரு ஊரில் ஓர் மரத்தின் கீழ் ஒரு பாட்டி வடை சுடுவதற்காக தயார் செய்து கொண்டு இருந்தா அப்போது
காகம் : ஒரு காகம் அந்த இடத்திற்கு வந்து பாட்டியிடம் தனக்கு பசிக்குது ஒரு வடை தரும் படி கேட்டது
நாங்கள் : (வடை தரும் படி உதவி கேட்டது )
பாட்டி : அப்போது அதற்க்கு பாட்டி தன்னிடம் இருக்கும் விறகு எல்லாம் ஈரமாக இருக்குது என்று காகத்திடம் சொன்னது
நாங்கள் : (உதவி செய்ய முடியாத நிலையில் நான் இருக்கிறேன் )
காகம் : என்னிடத்தில் கூடு கட்டுவதற்காக சேர்த்து வைத்து இருந்த சுல்லி விறகுகள் இருக்கு . அதை உமக்குத் தருகிறேன் அதில் எனக்கு வடை சுட்டு தரும்படி பாட்டியிடம் கேட்டது
நாங்கள் தன் உழைப்பைத் தருகிறேன் என்று சொன்னது)
பாட்டி : பாட்டியும் சரி என்று காகத்திடம் சொன்னா
நாங்கள் : தன் உழைப்பை பாட்டிக்கு கொடுத்தது .
காகம் : காகம் ஒவ்வொரு சுல்லியாக பாட்டி இருக்கும் இடத்திற்கு சுல்லிகளை கொண்டு வந்து சேர்த்தது .
பாட்டி : அதன் சுல்லிகளை (விறகுகளை )பயன் படுத்தி பாட்டியும் வடையை சுடத் தொடங்கினா
காகம் : காகம் நெடுநேரமாக பாட்டியின் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தது வடை வந்த மாதிரி இல்லை பின் பாட்டியை நோக்கி எங்கே ! என்னுடைய வடை என்று கேட்டது.
நாங்கள் : தன் உரிமையோடு கேட்டது .
பாட்டி : காகமே ! என்னை மன்னித்துக்கொள் . உனக்குரிய வடையை இன்னும் ஒரு நிமிடத்தில் தருகிறேன் என்றது
நாங்கள் : (செய்த பிழைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.)
காகம் : தன்னுடைய உழைப்புக்குரிய ஊதியத்தை உரிமையோடு பாட்டியிடம் கேட்டது .
பாட்டி : பின் பாட்டி தன்னிடம் இருந்த வடையை காகத்திற்குக்கு கொடுத்தது..
காகம் : காகமோ சந்தோஷத்தில் தனக்குக்கு கிடைத்த வடையை வாயில் கவ்விக் கொண்டு அந்த இடத்தில் இருந்து பறந்து ஒரு மரகிளையில் போய் நின்றது .
நாங்கள் : (சந்தோசம் என்பது எப்போதும் நிலையற்றது )
நரி : அப்போது அந்த இடத்துக்கு நரி ஒன்று வந்தது ,அந்த மரத்தின் கிளையில் நின்ற காகத்தை பார்த்தது.
நாங்கள் : (இவ்வுலகில் நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் அநேகமான பேர் இருகிறார்கள் )
நரி : நரி தனக்குள் ஒரு திட்டம் தீட்டியது . எப்படி காகத்திடம் இருந்து அந்த வடையை பறிக்கலாம் என்று என்னி கொண்டு இருந்த வேலையில் உடனே காகமே நீர் நல்ல பாட்டுப் பாடுவாய் தானே எனக்காக ஒரு பாட்டு பாடு என்று கேட்டது .
காகம் : காகம் அப்போது கா கா கா … என்று பாட்டுப் பாடத் தொடங்கியது வடையோ அந்த நேரம் கீழே விழுந்தது .
நாங்கள் : (தான் ஏமாறப் போவதாக முன்னமே தெரியவில்லை )
நரி : அந்த கணமே ! நரி விழுந்த வடையை கவ்வி கொண்டு ஓடியது .
நாங்கள் : ஆனால் அதற்க்குப்பின் தனக்கு என்ன நடக்கப் போகுது என்று தெரியவில்லை
காகம் : காகம் ஒருகணம் சிந்தித்தது என்னை ஏமாற்றிய நரியை என்ன செய்யலாம் என்று அடுத்த கணமே தனது சக காகத்தையும் அழைத்தது லட்சகணக்கான காகங்கள் அங்கே ஒன்று கூடியது . ஒவொரு காகமும் ஒவொரு கொத்தாக நரியை கொத்தியது .நரியோ அந்த இடத்தை விட்டு தப்பிக்க முடியாமல் தவிர்த்து இறந்தது …
நாமும் ஒன்று கூடுவோம் எங்கள் மக்களுக்காக எங்கள் தேசத்திற்க்காக எங்கள் உரிமைக்காக எங்கள் மொழிக்காக ஒன்று இணைவோம் !!!