Home » News » பயஸ் – ஹிங்கிஸ் இணை சாம்பியன்

பயஸ் – ஹிங்கிஸ் இணை சாம்பியன்

15

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் – சுவிட்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.

இதன் மூலம், இந்தியாவின் 41 வயது மூத்த நட்சத்திர வீரரான லியாண்டர் பயஸ் தனது 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வசப்படுத்தினார். அதேபோல், ஹிங்கிஸுக்கும் 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது மற்றொரு சுவாரசிய அம்சம்.

பயஸ் – ஹிங்கிஸ் இணை தன் இறுதிச் சுற்றில், ஃபிரான்ஸின் கிறிஸ்டினா மிளாண்டெனோவிக் – கனடாவின் டேனியஸ் நெஸ்டர் இணையை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் இந்திய – சுவிஸ் இணை 6-4, 6-3 என்ற கணக்கில் ஃபிரான்ஸ் – கனடா இணையை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

இந்தப் பட்டத்துக்கு முன்பாக, லியாண்டர் பயஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் 8 பட்டங்களும், கலப்பு இரட்டையரில் 6 பட்டங்களும் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், மார்ட்டினா ஹிங்கிஸ் மகளிர் ஒற்றையரில் 5 பட்டங்கள் உள்பட 15 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வசப்படுத்தி வைத்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus