இந்த வாரம் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்த முதல் ஐந்து இடங்களை பிடித்த படங்கள் பின் வருமாறு..
முதல் இடத்தில் இருக்கும் படம் The Hunger Games: Mockinjay- Part 1. இந்த படம் Hunger games படத்தொடரில் மூன்றாவது படம். இந்த படம் இந்த வாரம் 56.9 மில்லியன் டாலர்கள் வசூலித்தது.
25.8 மில்லியன் டாலர்கள் வசூலித்து இரண்டாம் இடத்தில் இருக்கும் படம் Penguins of Madagascar. இந்த படம் Madagascar படத்தொடரில் நான்காவது படம்.
மூன்றாவது இடத்தில் உள்ள படம் 18.8 மில்லியன் டாலர்கள் வசூல் செய்த Big Hero 6. இந்த படத்தை Walt Disney நிறுவனம் தயாரித்துள்ளது.
நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கும் படங்கள் Horrible Bosses 2 மற்றும் Interstellar
இந்த படங்கள் இரண்டும் முறையே 15.8 மில்லியன் டாலர்களும், 15.7 மில்லியன் டாலர்களும் வசூலித்துள்ளது.