Home » Sports News » பிரிமியர் டென்னிஸ் லீக்: சானியா அணி அபாரம்

பிரிமியர் டென்னிஸ் லீக்: சானியா அணி அபாரம்

மணிலா,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி உருவாக்கிய சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக்(ஐ.பி.டி.எல்.) போட்டித் தொடர் கடந்த 28–ந்தேதி தொடங்கியது. 4 அணிகள் இடையிலான இந்த போட்டியில் முதற்கட்ட சுற்றுகள் பிலிப்பைன்சில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர், ஆண்கள் இரட்டையர், முன்னாள் சாம்பியன் மோதல் என்று 5 ஆட்டங்கள் நடத்தப்படும். இதன் முடிவில் அதிக கேம்களை வசப்படுத்தியிருக்கும் அணி வெற்றி பெற்றதாக அர்த்தம். இதன்படி சிங்கப்பூர் ஸ்லம்மர்ஸ், மணிலா மாவரிக்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்திய இந்தியன் ஏசஸ் அணி நேற்று 3–வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராயல்சை 28–20 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. கலப்பு இரட்டையரில் சானியா மிர்சா–ரோகன் போபண்ணா (6–3), இரட்டையரில் ரோகன் போபண்ணா–மான்பில்ஸ் (6–4), ஒற்றையரில் மான்பில்ஸ் (6–3) ஆகியோரின் வெற்றி ஏசஸ் அணிக்கு பக்கபலமாக இருந்தது. 2–வது கட்ட ஆட்டங்கள் சிங்கப்பூரில் நாளை தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus