Home » London News » கண்டனப் போராட்டம் யாழ்.பல்கலையில்

கண்டனப் போராட்டம் யாழ்.பல்கலையில்

31.5

யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள அரசியல் தலையீடுகளை நிறுத்தி, துணைவேந்தர், பதிவாளர் மற்றும் வெளிவாரி பேரவை உறுப்பினர்களை உடனடியாக வேளியேற்ற வேண்டும் என்று கோரி யாழ்.பல்கலைக்கழத்தில் கண்டனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தினை தூய்மைப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இப்போராட்டத்தினை யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தலமைதாங்கி நடத்தியிருந்தது.

இருப்பினும் பீடாதிபதிகள், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினரும் கலந்து கொண்டிருந்தனர். காலை 9 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக வாளாகத்திற்குள் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்திற்கு முன்பாக ஒன்று கூடியவர்கள் தாம் முன்வைக்கும் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரி தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் பின்னர் அங்கிருந்து பேரணியாக யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலை வந்தடைந்த அவர்கள் கைகளில் பதாகைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியும் நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பல்கலைக்கழக துணைவேந்தரே வெளியேறு, பதிவாளரே வெளியேறு, வெளிவாரி பேரவை உறுப்பினர்களே வெளியேறு, அரசியல் தலையீடுகளை நிறுத்து என்று கோசங்களை எழுப்பியிருந்தனர்.

மேலும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிதி மோசடிகள், ஊழல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும், சீரழிந்த அரசியற் கலாசாரம்! சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழக கலாசாரம், பினாமி அமைப்புக்கள் அன்று தாடிப் புலவர்கள் வளர்த்தனர் தமிழ்ச் சங்கம்! இன்று தாடியின் புதல்வர்கள் வளர்ப்பதும் தமிழ்ச் சங்கமா?, 2009 ற்குப் பின்னராக சகல நியமனங்களும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும், தியேட்டர் கதவு மூடியதால் வடைதான் போச்சு! பல்கலைக்கழக கதவு மூடியதால் கோழிப் புரியாணியும் பல ஆயிரம் காசும் பேச்சு!, துணைவேந்தராக்கியதும் நானே! பட்டப்படிப்புக்கள் பீடாதிபதியாக்கியதும் நானே! நானே தேவன்! கடந்தகால சம்பவங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும், பல்கலையில் முறையற்ற நியமனங்களை நிறுத்து என்று எழுதப்பட்ட பதாகைகளையும் கைகளில் தாங்கியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சுமார் ஒரு முணித்தியாலங்கள் வரையில் இப் போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus