ஆகமவிதிகளை மீறி செயல்படுவதும் தெய்வத்திற்கு தொண்டுகளைச் செய்து அதை பின்பு செய்யாமல் விடுவதும் ஆலயத்திற்குறிய பொருட்களை சொந்த பாவனைக்கு உபயோகிப்பதும் தெய்வத்திற்குறிய பொருட்களை திருடுவதும் தெய்வத்திற்குறிய பொருட்களை நன்கொடையாக கொடுப்பதும் ஆண்டவனுக்குறிய பொருட்களை பணத்திற்காக விற்பதும் பணம் சம்பாதிப்பதே குறிக்கோலாகக் கொண்டு ஆண்டவனுக்கு கோயில்களைக் கட்டுவதும் இறைவனுடைய பொருட்களை மற்றவர்கள் பாவிப்பதற்கும் கொடுப்பதும் ஆலய விதிமுறைகளை மீறுவதும் ஆலயத்துக்குறிய பொதுக்கூட்டங்களில் சண்டை போடுவதும்
ஆலயங்களில் நடக்க இருக்கும் சில நல்ல காரியங்களை தடுப்பதும் ஆலயத்திற்குள் மற்றவர்களை தாக்குவதும் ஆலயத்திற்குள் வருபவர்களை உதாசின்ப்படுத்துவதும் பூசகர்களை மதிக்காது நடப்பதும் ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களை ஒரு முகம் (பணக்காரன், ஏழை) பார்த்து நடப்பதும் இவைகள் யாவுமே இறைவனுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். இதைத்தான் குற்றம் என்றும், தெய்வக்குற்றம் என்றும் சொல்லுவார்கள். அன்பார்ந்த அடியார்களே ஆலயத்திற்குள் சென்றவுடன் ஆண்டவனின் காலடியில் அனைவரும் ஒன்று தான்
இப்படிக்கு
ஆதிகேசவா
Email Id: athikesavas@gmail.com