Home » Indian News » துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை – வங்கிகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும்

துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை – வங்கிகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும்

CCTV-CAMERA

காஞ்சீபுரத்தில் உள்ள வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பாக வங்கி மேலாளர்களுடன் போலீசார் நடத்திய ஆலோசனை கூட்டம், காஞ்சீபுரத்தில் நடைபெற்றது. இதில் காஞ்சீபுரம் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் மேலாளர்கள், துணை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:- காஞ்சீபுரம் உட்கோட்டத்தில் உள்ள வங்கிகளின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே அனைத்து வங்கிகளிலும் 100 மீட்டர் தொலைவுக்கு கண்காணிக்கக்கூடிய சி.சி.டி.வி கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும்.

ஒவ்வொரு வங்கிகளிலும் கட்டாயம் இரவு காவலாளிகளை நியமிக்க வேண்டும். பாதுகாப்பு பெட்டக வசதியை செய்வதுடன், எச்சரிக்கை அலாரத்தையும் பொருத்த வேண்டும். லாக்கர் இருக்கும் அறையின் கதவு மற்றும் கட்டிடம் உறுதியுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வேறு கட்டிடத்துக்கு இடம் மாற்றம் செய்யலாம்.

அனைத்து வங்கிகளிலும் 24 மணி நேரமும் மின்தடை ஏற்படாமல் இருக்கும் வகையில் ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய வசதிகளை ஏற்படுத்தாத வங்கிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் அவற்றை செய்து முடித்து அதுகுறித்த தகவலை போலீஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus