கொழும்பு துறைமுகம் முதல் கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வரை எரிபொருள் கொண்டுசெல்லப்படும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்த வெடிப்பு ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த குழாயில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் தற்போது குறித்த குழாயின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்தப் பிரச்சினை தொடர்பில் பலமுறை முறைப்பாடு செய்தும் கடந்த கால அரசாங்கம் பாராமுகமாக இருந்ததாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
சில வருடங்களாகவே இந்தக் குழாயில் எரிபொருள் கசிவு ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.