ஐரோப்பிய நாடான போலந்தில் வருகிற மே மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டன. அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், அதிபர் தேர்தலில் கிரீன் கட்சியை சேர்ந்த அன்னா குரோட்ஷிகா (60) போட்டியிடுகிறார். தற்போது இவர் எம்.பி. ஆக இருக்கிறார். இவர் ஆணாக பிறந்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். கடந்த 2011–ம் ஆண்டில் எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம் ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய முதல் மாற்று உடல் உறுப்பு எம்.பி. என்ற பெருமையை பெற்றார். முன்பு இவர் சினிமா டைரக்டராகவும், புத்தக பதிப்பாளராகவும் இருந்தார். தற்போது அதிபர் தேர்தலில் கிரீன் கட்சி சார்பில் தான் போட்டியிட போவதாக இணையதளத்தில் அவர் அறிவித்துள்ளார்.