கோல் இந்தியா நிறுவனத்தில் 10 சதவீத அரசாங்கத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை விலக்கிகொள்ளப்பட்டன. இந்த பங்கு விற்பனை வெற்றி அடைந்ததை அடுத்து மேலும் சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பிப்ரவரி மார்ச் மாதத்தில் விலக்கிகொள்ளப்படும் என்று தெரிகிறது.
இந்த இரு மாதங்களில் ஓ.என்.ஜி.சி., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் என்.ஹெச்.பி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலக்கிக்கொள்ளப்படும். என்று தெரிகிறது.
நிதிப்பற்றாக்குறையை 4.1 சதவீதமாக கட்டுப்படுத்த அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இதற்காக நடப்பு நிதி ஆண்டில் அரசு பங்குகள் விற்பனை மூலம் 43,425 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது.
கடந்த ஐந்து நிதி ஆண்டுகளாக பங்கு விலக்கல் மூலம் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையினை மத்திய அரசு எட்டவில்லை.
நடப்பு நிதி ஆண்டில் இலக்கை அடைய மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதுவரை செயில் பங்கு விற்பனை மூலம் 1,719 கோடி ரூபாயும், கோல் இந்தியா மூலம் 22,557 கோடி ரூபாயும் திரட்டப்பட்டிருக்கிறது.
கடந்த செப்டம்பரில் ஓ.என்.ஜி.சி., என்.ஹெச்.பி.சி. நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.