மஹிந்த அரசினால் தடைவிதிக்கப்பட்ட தமிழக தொலைக்காட்சி அலைவரிசைகள் மீண்டும் இலங்கையில் இயங்கத்தொடங்கியுள்ளது. இறுதி யுத்த அவலங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை அம்பலப்படுத்தி வந்திருந்த தமிழக தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்படுத்துவதை இலங்கை அரசு தடுத்து வைத்திருந்தது.
இத்தகைய தொலைகாட்சிகள் செய்மதி ஊடக இயக்கப்படுகின்றமையினால் அதனை பயன்படுத்தியும் உள்ளுர் முகவர்களை முடக்கியும் வட-கிழக்கு பகுதிகளில் மக்கள் தமிழக தொலைக்காட்சிகளினை பார்க்கவிடாது தடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையினில் தற்போது தடைகள் நீக்கப்பட்டுள்ளதையடுத்து புதிய தலைமுறை மற்றும் மக்கள் தொலைக்காட்சி போன்றவை பார்வையிட இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.