Home » Cinema News » 25–வது திருமண நாள்: நானும் என் மனைவியும் விட்டுக்கொடுத்து வாழ்கிறோம்- விஜயகாந்த் பேச்சு

25–வது திருமண நாள்: நானும் என் மனைவியும் விட்டுக்கொடுத்து வாழ்கிறோம்- விஜயகாந்த் பேச்சு

fc9b98fa-bfc9-4bd1-972d-3a367ea0ff01_S_secvpf.gifவிஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ‘சகாப்தம்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரிக்கிறார். சுரேந்திரன் டைரக்டு செய்கிறார். ‘சகாப்தம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. பாடல் சி.டி.யை குட்டி ஹெலிகாப்டரில் வைத்து ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயக்கி மேடையில் இருந்த விஜயகாந்த் கையில் கொண்டு கொடுப்பது போல் வித்தியாசமான முறையில் இந்த விழா நடந்தது. கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:–

எனக்கு 25–வது திருமண நாள். குடும்ப வாழ்க்கை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நானும் எனது மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்கிறோம். நிறைய விஷயங்களில் விட்டுக் கொடுக்கிறோம். என் மனைவி படித்தவர். நான் படிக்காதவன். இதைப் பற்றி என் மனைவி நினைத்ததே இல்லை. எல்லா விஷயங்களிலும் உதவியாக இருக்கிறார்.

என் மகன் சண்முகபாண்டியன் ‘சகாப்தம்’ படத்தில் கதாநாயகனாகியுள்ளார். இந்த படத்தில் நல்ல கருத்து ஒன்றை சொல்லி இருக்கிறோம். படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். சண் முகப்பாண்டியன் நல்ல இடத்துக்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. டைரக்டர், ஒளிப்பதிவாளர், உள்ளிட்ட டெக்னீசியன்கள் திறமையானவர்கள். எங்கள் காலத்துக்கும் இப்போதைய காலத்துக்கும் தயாரிப்பு செலவுகள் வித்தியாசப்படுகிறது.

முன் பெல்லாம் ரூ.1 லட்சம் செலவு என்று இருந்தது. இப்போது ரூ.1 கோடி ஆகி இருக்கிறது. ரூ.10 லட்சம் செலவு என்று இருந்தது. ரூ.10 கோடி, ரூ.20 கோடி, ரூ.30 கோடி என ஆகி உள்ளது. இந்த விழாவில் பலர் பங்கேற்று சண்முக பாண்டியனை வாழ்த்தினர். எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நடிகர் பிரபு பேசும் போது, சண்முகபாண்டியன் அவரது அப்பாவைப் போல் திரையுலகில் வளர வேண்டும். விஜயகாந்த் நிறைய விஷயங்கள் தெரிந்தவர். எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். அவரைப் போல் சண்முகபாண்டியன் உருவாக வேண்டும் என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசும் போது, ‘‘சினிமாவில் நடனம் தெரிந்தால் பெரிய நிலைக்கு வரலாம். சண்முகப் பாண்டியனுக்கு நடனம் நன்றாக வருகிறது. திறமையாக நடிக்கவும் செய்கிறார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆவதற்கான எல்லா விஷயங்களும் இருக்கிறது. விஜயகாந்தைப் போல் சண்முகப்பாண்டியன் வளர வேண்டும் என்றார்.

நடிகர் ஜெயம் ரவி பேசும் போது, ‘‘விஜயகாந்த் எங்களுக்கெல்லாம் கேப்டனாக இருக்கிறார். அவரிடம் அன்பு உண்டு. பாசம் உண்டு, என் வளர்ச்சியில் அக்கறை எடுத்து பல ஆலோசனைகள் சொன்னார். அப்பா மாதிரி சண்முகபாண்டியன் நடிக்க வேண்டும்’’ என்றார்.

விழாவில் நடிகர்கள் நெப்போலியன், வாகை சந்திரசேகர், விமல், விக்ரம் பிரபு, நடிகை தேவயானி, உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தினார்கள். ‘சகாப்தம்’ படத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் நேகா, சுப்ரா, மற்றும் நண்டு ஜெகன், சிங்கம் புலி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus