Home » News » 3 நாடுகள் கிரிக்கெட்டில் இந்தியா 200 ரன்னில் சுருண்டது

3 நாடுகள் கிரிக்கெட்டில் இந்தியா 200 ரன்னில் சுருண்டது

201501210126489427_Triad-In-cricketMatch-against-EnglandTeam-India-Failure_SECVPF

பெர்த், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா 15 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இந்தியா– இங்கிலாந்து அணிகள் இன்று மோதின. இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்திய அணியில் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக மொகித்சர்மா இடம் பெற்றார். ரோகித்சர்மாவின் காயம் குணமடைந்தாலும் உலககோப்பையை கருத்தில் கொண்டு அவர் இடம் பெறவில்லை. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் ‘லீக்’ ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இந்தியா 153 ரன்னில் சுருண்டது. இதனால் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக ஷிகார் தவான், ரகானே களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக ஆடினர். குறிப்பாக மோசமான பார்மில் இருக்கும் தவான் பொறுமையாக விளையாடினார். தவான் வோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 65 பந்தில் 4 பவுண்டரியுடன் 38 ரன் எடுத்தார். ஸ்கோர் 83 ரன்னாக இருந்தது. அடுத்து ரகானேவுடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

சிறப்பாக விளையாடிய ரகானே அரை சதம் அடித்தார். அவர் 71 பந்தில் 50 ரன்னை தொட்டார். இதில் அவர் 2 பவுண்டரி மட்டுமே அடித்து இருந்தார். கோலி 8 ரன்னிலும், ரெய்னா ஒரு ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து களம் வந்த அம்பதி ராயுடு 12 ரன்னில் ஆட்டம் இழந்தார். நிலைத்து நின்று விளையாடிய ரகானே 73 ரன்னில் (101 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டீவன் பின் பந்தில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 136 ரன்னாக இருந்தது.

அடுத்து ஜோடி சேர்ந்த டோனி– ஸ்டூவர்ட்பின்னி நிலைத்து நிற்க முயன்றது. ஆனால் பின்னி 7 ரன்னிலும், கேப்டன் டோனி 17 ரன்னிலும், ஜடேஜா 5 ரன்னிலும், அக்சர் பட்டேல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அப்போது ஸ்கோர் 9 விக்கெட்டுக்கு 165 ரன்னாக இருந்தது. கடைசி விக்கெட்டான முகமது ஷமி 18 பந்தில் 25 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். இந்திய அணி 48.1 ஓவரில் 200 ரன்னுக்கு ‘ஆல்அவுட்’ ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus