Home » Cinema News » அஞ்சலி என் திருமணம் வெளிப்படையாக நடக்கும்

அஞ்சலி என் திருமணம் வெளிப்படையாக நடக்கும்

anjali_latest_still

நடிகை அஞ்சலி திருமணத்துக்கு தயாராகி உள்ளதாகவும் மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவின. திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாகவும் கூறப்பட்டது. இதற்கு அஞ்சலி பதில் அளித்துள்ளார்.

என்னைப் பற்றி திடீர் வதந்திகள் பரபரப்படுகின்றன. திருமணம் பற்றியும் தவறான செய்திகள் வருகிறது. இவை எதிலும் உண்மை இல்லை. என்னைப் பற்றி உண்மைக்கு புறம்பான தேவையற்ற கிசுகிசுகள் வருகின்றன. இதில் ஏன் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. எனக்கு திருமணம் நடப்பதாக இருந்தால் அது வெளியப்படையாகவே நடக்கும். எல்லோருக்கும் தெரிவித்து விட்டுத் தான் திருமணம் செய்து கொள்வேன். எனவே தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார். அஞ்சலி தெலுங்கில் நடித்த கீதாஞ்சலி படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. தற்போது ஜெயம் ரவி ஜோடியாக தனி ஒருவன், அப்பா டக்கரு படங்களில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus