Home » Astro » 2015ம் ஆண்டு ராசி பலன்கள்

2015ம் ஆண்டு ராசி பலன்கள்

மேஷம்

Mesham

மேஷராசி அன்பர்களே! இந்த 2015ம் வருடத்தில் அதிஸ்டம் அது இஸ்டத்துக்கு வந்தாலும் அதை முழுமையாக அடையணும் என்றால் உங்கள்செ சேம்பேறித்தனத்தை விரட்டுறதில மட்டும் கொஞ்சமும் சோம்பல் படாமல் இருக்கிறது அவசியமாகும்.

அதிகாலை தொடக்கம் தான் உங்களுக்கு விழுசசங்களுக்கான ஆரம்பமாக இருக்கும். அதனால் தினமும் அதிகாலையில் கண்விழித்திருத்தல் நல்லதாகும். அடுத்தது ஆரோக்கியம் வருகிற அதிஸ்டத்தை வரவேற்கணும் அதற்கு உடல் ஆரோக்கியம் அவசியம் அதனால் தினமும் சிறிய நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். உணவுமுறையிலும் நேரம் தவறாமல் எளிமையான உணவையும் கடைப்பிடிப்பது நல்லதாகும்.

இந்த வருடத்தில் நீங்கள் எத்தனை முறை சிவாலயங்களிற்கு போய் வாறீர்களோ அத்தனை மடங்கு அதிஸ்டம் உங்களிற்கு அதிகரிச்சுக் கொண்டே இருக்கும். மாதம் ஒருமுறையாவது அங்கு நடக்கும் அன்னதானத்திற்கு உங்களால் இயன்ற அளவு பச்ச அரிசி வாங்கிக் குடுங்கள். உங்கள் வாழ்க்கை பசுமையாக இருக்கும் இயலாதபட்சத்தில் வில்வ இலை வாங்கி அர்சனை செய்யுங்கள். நற்பலன் தரும்.

உங்கள் ராசி அதிபதியான செவ்வாய்க்கு உரிய சமித்து கருங்காலி தான். அதனால் உங்கள் பக்கத்தில் உள்ள கோயில்களில் ஏதாவது யாகம், ஹோமம் நடந்தால் அவங்கள் அனுமதியை வாங்கிக் கொண்டு உங்களால் இயன்ற அளவு கருங்காலி சமித்தை வாங்கிக் குடுக்கிறது நல்லது. யாகம் முடிஞ்சதும் யாக குண்டலத்திலிருந்து கொஞ்சம் சாம்பலை வாங்கிக் சின்னப் பொட்டளமாக்கி உங்கள் வீட்டு பூஜை அறையிலோ, வியாபார ஸ்தலத்திலோ, பணியிடத்திலோ பத்திரமாக வைத்திருங்கள். வாரம் ஒருமுறை பட்டலத்திற்கு தூபம் காட்டுங்கள்.

உங்களுக்கு அதிஸ்டம் தரக் கூடிய கலர் பச்சைதான். இந்த வருடத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் அமைப்பைக் கணக்கிட்டு உங்களிற்கு சாதகம் தரக்கூடிய வகையிலே தான் இந்த நிறம் சொல்லப்பட்டிருக்கிறது. பச்சை நிறத்தில் சிறு கைக்குட்டையோ சிறு துணியோ பாக்கில் கொண்டு திரிந்தால் உங்களிற்கு பணவரவு அதிகரிக்கும் வீண் செலவு ஏற்படாது. எல்லா நாள்களையும் விட செவ்வாய்க்கிழமைகளில் நீங்கள் கவனமாகவும் எச்சரிக்கையுடலும் செயல்படுதல் அவசியம். அந்தக்கிழமையில் எதாவது கையெழுத்திடுவதென்றால் ஒருமுறைக்கு இருமுறை படிச்சுப் பார்த்து கையெழுத்திடுதல் முக்கியம்.

வியாழக்கிழமை உங்களுக்கு நற்பலன் தரும் நாளாக அமையும். வியாழன் பக்கத்திலுள்ள மகான்கள் திருத்தலம் சென்று வழிபடுங்கள். அதிஸ்டம் உங்களைத் தேடி வரும் எதிலும் உணர்ச்சிவசப்படுகின்ற உங்கள் குணத்தை றோம்பவே மாத்திறது நல்லது.

நீங்கள் ஓடும் வாகனத்தில் சிறிய பழுது இருந்தாலும் உடனே சரி செய்வது நல்லது வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அவசியம்.

எட்டாம் இடத்தில் சனி வந்ததுமே எதோ ஒட்டுமொத்தக் கஸ்டமும் உங்களிற்கு தான் என்று பயப்பிடாதீர்கள் மேற்கூறிய பரிகாரங்களை செய்யுங்கள் ஒட்டு மொத்த பலனையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

ரிஷிபம்

Rishibam

ரிஷிபராசி அன்பர்களே! ஏழாம் இடத்தில் சனியால் பாழாப் போகும் குடும்ப வாழ்க்கை என்று யாராவது அச்சப்படுத்தியிருக்கலாம் கவலையை விடுங்கள் இந்த வருடம் உங்கள் வார்த்தைகளில் இனிமையும் நேர்த்தியும் இருந்தாலே போதும் அதிஸ்டம் உங்களைத் தேடி வரும். அதோட குடும்ப ஸ்தானத்தில குருபார்வையும் படக்கூடிய காலகட்டத்தில் வருடம் தொடங்கிறதால் இல்லத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். இன் சொல் இருந்தால் அது நிலைக்கும்.

நீங்கள் பிறக்கும்போதே சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தீர்கள். சுக்கிரனுக்கு சனிபகவான் நட்பு என்பதால் கெடுபலன் அதிகம் கொடுக்க மாட்டாது. அதேசமயம் விட்டுக்கொடுத்தல் உங்கள் குணமாக இருந்தால் வீட்டிலும் விரிசல் விழாது. வீண்கோபமோ வெட்டியான தர்க்கமோ வேண்டாம். முயற்சிகளில் முழு ஈடுபாட்டோடு இருந்தால் உங்களுக்கு எல்லா வித யோகமும் தேடி வரும்.

நீங்கள் தூங்கி எழுந்ததும் முதல் வேலையா பெருமாளுடன் இருக்கும் தாயின் படத்தை பாத்து விழிக்கிறது நல்லது. தேடித்தேடி யோகம் வந்தாலும் அதை அனுபவிக்க உடல் ஆரோக்கியம் வேண்டும் ஆகவே தினமும் காலை சாப்பிட முன் உடல்பயிற்சி செய்தல் நன்று.

உங்கள் வீட்டிற்கு அருகில் யாகம் ஹோமம் நடந்தால் வெண்தாமரை மலர் அல்லது வெள்ளை மலரை வாங்கி ஹோமத்திற்கு குடுங்கள் வழிபாடு முடிஞ்சவுடன் ஹோம பஸ்மத்தை (சாம்பல்) கொண்டுவந்து உங்கள் வீட்டு வாசலிலோ வர்தக நிலையத்திலோ கட்டி விட வேண்டும் வெள்ளிக்கிழமைகளில் அதற்கு தூபம் காட்டுதல் வேண்டும்.

உங்களிற்கு அதிஸ்டம் தரும் நிறம் வெள்ளை நிறம் தான். இந்த கலரில் தான் ஆடை அணியனும் என்றில்லை. ஒரு சிறிய கைப்பை, பேர்ஸ்சில் ஒரு சிறிய வெண் துணியை வைத்துக் கொண்டு திரிதல் நல்லதாகும்.

முதல்முதல் வேலைக்கு அப்பிளிகேசன் போடுறதென்றாலும் சரி வர்தக முதலீடு போடுவதென்றாலும் சரி சனிக்கிழமைகளில் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். கூறிய பாரிகாரங்களை செய்யுங்கள் நற்பலன்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

மிதுனம்

Methunam

மிதுனராசி அன்பர்களே! புதன் கிரக ஆதிக்கத்தில் புத்திசாலியாக பிறந்த நீங்கள் வளர வளர வீன்குழப்பத்தாலேயும் வேண்டாத வேலையாலும் பயத்தாலும் வாய்ப்புக்களை கைநழுவ விடுவீர்கள். அதனைத் தவிர்த்தாலே நன்மைகளை எட்டிப் பிடிச்சு ஏற்றமும் மாற்றமும் இந்த ஆண்டில் உங்களிற்கு ஆரோக்கியம் முக்கியம்.

நீங்கள் கண்விழித்து எழும்பியதும் சிவன் பார்வதி படத்தைப் பார்ப்பது நல்லது “ஓம் நமசிவாய” என்னும் பஞ்சதந்திர மந்திரத்தை உச்சரித்தே காலையில் எழும்புதல் வேண்டும் இது யோகத்தை தேடிவரச் செய்யும்.

உங்களுக்கு அருகிலுள்ள் கோவிலில் யாகம் ஹோமம் நடந்தால் குருக்கள் அனுமதியுடன் நாயுருவி சமித்து கொஞ்சம் வாங்கி குடுங்கள். யாகம் முடிஞ்சதும் அந்த சாம்பலை எடுத்து துணியில் முடிஞ்சு வீட்டிலோ அல்லது வர்தக இடத்திலோ வாசலில் கட்டுதல் வேண்டும். வியாழக்கிழமையில் அதற்கு தீபம் காட்டி வழிபடுதல் வேண்டும் செல்வம் வேறு எங்கும் செல்லாமல் தேடி வரும்.

இந்த வருடம் உங்களுக்கு மஞ்சள் நிறமே மிக உகந்தது. அதற்காக எப்பவுமே மஞ்சள் ஆடை தான் அணிய வேண்டும் என்றில்லை. பேர்சிலோ பாக்கிலோ சிறு மஞ்சள் துணியைப் போடுதல் நன்று மஞ்சள் நிறம் உங்களை வாழ்க்கையில் மங்களம் மலரச் செய்யும்.

உங்களிற்கு அதிஸ்ட கிழமை வியாழக்கிழமை அமைகின்றது. மனதிற்கு பிடித்த யாராவது ஒரு மகானை வியாழன் தோறும் மனதார வணங்குங்கள். வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்கு முதல் ஆரம்பிக்கின்ற எல்லாத் காரியங்களும் இனிதே நிறைவேறிடும். நீங்கள் அன்றய தினம் குருபகவானை தரிசிப்பது நல்லது. பக்கத்திலிள்ள ஒரு மகான் சன்நிதியில் நெய் விளக்கேற்றி வணங்குவது நல்லது. செவ்வாய்க்கிழமைகளில் எந்த ஒரு செயலும் செய்ய வேண்டாம்.

கடகம்

Kadakam

கடகராசி அன்பர்களே! அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட அவஸ்தை இப்போது தான் நீங்கிச்சு என்று பெருமூச்சு விடுகிறீர்கள் இனிமேல் அதிஸ்டத்தை எதிர்பாக்கிறது நியாயம் தான் நீங்கள் எதிர்பார்க்கிற சமயத்தில் வாய்ப்புக்கள் வந்து கதவை தட்டினாலும் சந்தேகத்தால் அதை சட்டுன்னு விரட்டுற குணத்தை மாத்திடனும். அதே சமயம் ஒருமுறை ஒருவரை நம்மட்டா அதை எதற்காகவும் மாற்றிக்காத நல்ல குணம் உண்டு உங்களிற்கு மனதை ஒருநிலைப்படுத்தி தியானம், யோகா செய்யப்பழகினால் அதிஸ்டம் எப்போதும் உங்களிற்காக காத்திருக்கும். உடலில் இருந்து வியர்வை வெளியேறும் படியாக உடற்பயிற்சி செய்தல் நல்லது.

2015ம் ஆண்டு உங்களிற்கு நல்லதை தரனுமென்றால் நீங்கள் காலையில் கண் விழித்ததும் பார்வதியின் படத்தைப் பாக்கிறதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் சிவனும் சக்தியும் இணைந்த அர்தனாதீஸ்வரர் வடிவத்தையும் பார்க்கலாம்.

உங்கள் தினசரி உணவு வகைகளில் அரிசி கலந்த உணவு வகைகளை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள் திங்கள் கிழமை இரவு நேரத்தில் அரிசி கலந்த உணவை சாப்பிடுதலைத் தவிர்தல் நல்லது. மாதம் ஒரு திங்கட்கிழமை அரிசியால் செய்யப்பட்ட உணவு வகைகளைத் தானம் செய்வது நல்லது. இவ் வருடம் உங்களிற்கு முன்னேற்றமானதாக இருக்கும்.

உங்களிற்கு அருகிலிலுள்ள் கோவிலில் யாகம் நடந்தால் குருக்கள் அனுமதியுடன் முருங்கு மர சமித்தை குடுங்க. யாகம் முடிஞ்சதும் ஹோம பஸ்மத்தை (சாம்பல்) வாங்கி துணியில் முடிஞ்சு வெள்ளை நூலால் கட்டி பூஜை அறையில் வியாபார நிலையத்திலோ எங்காவது கால்படாத இடத்தில் வைத்து திங்கட்கிழமைகளில் பூஜை செய்து தூபம் காட்டி கும்பிட்டால் வராத கடன்கள் சொத்து வழக்குகள் உங்களிற்கு சாதகமாக அமையும்.

உங்கள் ராசிப்படி உங்களிற்கு அதிஸ்டம் தரக்கூடிய நிறம் வெண்மை என்பது பலருக்கு தெரிஞ்சிருக்கும். ஆனால் 2015ம் இராசிப்படி உங்களிற்கு அதிஸ்டம் தரும் நிறம் சிவப்பு அதற்காக நாள்தோறும் சிவப்பு ஆடைதான் அணிய வேண்டும் என்றில்லை. சிவப்பு நிற சிறிய துணியினை உங்கள் கைப்பெர்சிலோ பாக்கிலோ கொண்டு திரிந்தால் நல்லது.

உங்கள் ராசிப்படி இந்த வருடத்தில் உங்களிற்கு நன்மை தரும் நாள் வெள்ளிக்கிழமை தான் உங்கள் முயற்சிகளை வெள்ளிக்கிழமைகளில் எடுப்பது நன்மையைத் தரும்.

சிம்மம்

Simmaam

சிம்மராசி அன்பர்களே! வருடம் ஆரம்பிக்க முன்னாடியே வந்த சனிப்பெயர்ச்சியில் உங்களிற்கு அட்டமத்து சனி ஆரம்பிச்சதால் உங்களோட வாழ்க்கையின் அர்தமே தொலைந்த மாதிரி அவஸ்தைகள் வரப்போகிறதென்று யாராவது பயமுறுத்தி இருந்தால் பயப்படாதீர்கள். ஆரோக்கியத்திற்கு காரணமான சூரியன் ராசியில் பிறந்தவர்கள் நீங்கள் கவனமாகவும் அமைதியாகவும் செயற்பட்டால் எந்தக்கஸ்ரமும் வராது செழிப்பான வாழ்வு மனம்போல் உங்களிற்கு கிட்டும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளையும் மூக்குக்கு மேல வரும் கோபத்தையும் விட்டிட்டு செய்யும் தொழிலிலே முழு ஈடு பாட்டுடன் இருந்தால் அதிஸ்டம் உங்களைத் தேடி வரும்.

அதிஸ்டம் உங்களைத் தேடி வரணுமென்றால் முதல்ல தூங்குற இடத்தை மாத்துதல் வேண்டும் அதே போன்று எத்தனை மணிக்கு தூங்கி விழித்தாலும் சரி ரங்கநாதன் படத்தை பாக்கிறதை வழக்கமாக வைக்கவேணும் இது உங்க வாழ்க்கையை நிமிர்ந்து நிற்க வைக்கும்.

தினமும் ஒருமுறை உங்கள் உணவில் கோதுமை கலந்த உணவை சேர்பது நல்லது சூரிய உதயத்திற்கு முன்பு தியானம் செய்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் தரும்.

உங்கள் வாழ்விடத்திற்கு அருகில் உள்ள கோவிலில் யாகம் செய்தால் குருக்கள் அனுமதியுடன் எருக்கை சமித்தை ஓம குண்டலத்திற்கு வாங்கிக் கொடுங்கள். வழிபாடு முடிஞ்சதும் அதன் சாம்பலை எடுத்து உங்கள் வீட்டு பூஜை அறையிலோ வியாபார இடத்திலோ கால்படாத இடத்தில் வைத்து விடுங்கள் வரக்கூடிய திருஸ்டி தோஷங்களை அகற்றி நன்மை பயக்கும்.

இந்த ஆண்டின் அதிஸ்ட நிறம் வெண்மை தான். அதுகும் இளம் மஞ்சள் கலந்த வெண்மையே உகந்தது. நீங்கள் பிரயாணம் செய்யும் போது வெண்மை ஆடை அணியா விட்டாலும் வெண்மை நிற சிறு துணியை உங்கள் பாக்கில் கொண்டு திரிந்தால் நன்று.

உங்கள் வாழ்க்கையில் அதிஸ்ரம் தரும் நாள் ஞாயிற்றுக்கிழமை உங்களோடு புது முயற்சிகள் சுபகாரியங்களை அன்றைய தினம் செய்வது நன்மை தரும்.

கன்னி

Kanni

கன்னிராசி அன்பர்களே! ஏழரைச்சனியின் பாதிப்பில் இருந்து முழுமையா விடுபட்டு நின்மதிக்காற்றை சுவாசிக் கொண்டிருக்கிறீர்கள் பிறகிரகங்களோட அமைப்பையும் சாதகமான சுழல் நிலவற கால கட்டங்கள்ல நிச்சயம் பெரிய அளவுல உங்களுக்கு யோகம் கைகூடும். அதேசமயம் இந்த வருசத்தில் உங்களிற்கு அதிஸ்டம் வர்றதிர்காக வாய்ப்புக்களை அதிகரிக்க சில வழிமுறைகளைத் தெரிஞ்சு கொள்ளுதல் அவசியம்.

புதன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எப்போதுமே திட்டமிட்டு அதை முழுமையாக செயல்படுத்தி முன்னேறக் கூடியவர்கள். இந்த ஆண்டின் தொடக்கமே உங்களோட திறமைகள் வெளிப்பட்டு பாராட்டும் புகழும் பெறக்கூடிய விதத்தில் இருக்கும் எதிலும் வீண் சந்தேகமும் வார்த்தைகளை கடுமையாக வெளிவிடாமலும் இருந்தால் மட்டுமே அந்த அதிஸ்டம் நிலைச்சிருக்கும்.

நீங்கள் காலையில் தூங்கி எழுந்ததும் குருவாயூரப்பன் படத்தை பார்க்கிறதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் வாரம் ஒருமுறையாவது உங்கள் உணவில் சிறிதளவு மிளகு, பச்சைப்பயறு கலந்திருப்பது நல்லது. உங்களிற்கு அருகிலுள்ள கோவிலில் ஹோமம், யாகம் நடந்தால் குருவின் அனுமதியுடன் உங்களால் இயன்ற அளவு நாயுருவி சமித்தை வாங்கிக் குடுங்கள் வழிபாடு முடிஞ்சதும் யாக புஸ்மத்தை (சாம்பல்) கொஞ்சம் வாங்கிட்டு வந்து உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்திலோ அல்லது வர்தக இடத்திலோ வைச்சிருபப்து நல்லது. திருஸ்டி தோசத்தால் தடைப்பட்டிருந்த அதிஸ்டம் உங்களைத்தேடி வரும்.

உங்கள் ராசியின்படி உங்களிற்கு அதிஸ்டத்தை அள்ளித்தருவது பச்சை நிறமே ஒவ்வொருநாளும் பச்சை நிற ஆடைதான் அணிய வேண்டும் என்றில்லை பச்சை நிறத்தில் சிறிய துணியை எடுத்து நீங்கள் அன்றாடம் கொண்டு திரியும் பாக்கிலோ அல்லது பேர்சிலோ கொண்டு சென்றால் நன்மை தரும்.

உங்களிற்கு அதிஸ்ட நாளாக புதன் அமைகிறது. எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் பொழுது புதன் கிழமைகளில் ஆரம்பித்தால் நன்மை உண்டாகும்.

துலாம்

Thulaam

துலாம் பராசி அன்பர்களே! அதிஸ்டத்தின் தலைவன் சுக்கிர திசையில் பிறந்தவர்கள் நீங்கள் ஜென்மத்தில இருந்த சனியோட தாக்கம் விலகி நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும் ஏழரைச் சனியின் தாக்கம் என்ன செய்யுமோ என்ற அச்சம் உங்களுக்குள் இருக்கும். இந்த 2015ம் ஆண்டு உங்களிற்கு நன்மை தரக்கூடிய நாளாகவே இருக்கும் என்பது தான் நிஜம்.

இந்த வருசத்தில உங்களிற்கு வீடு, வாகனம், ஆடை, அபரணமென்று சேரவும் சுபகாரியங்கள் தடை விலகி கைகூ டவும் யோகம் இருக்கிறது. அந்த நன்மைகள் உங்களிற்கு முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் அதற்கான சில எளிமையான பரிகாரம் செய்தால் நன்மை தரும்.

உங்கள் வாக்கில் இனிமை இருக்க வேண்டும். மூன்றாம் நபர் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் நன்மை இரட்டிப்பாகும். நீங்கள் தூங்கி விழித்துப் பார்ததும் சிவன்-பார்வதி படத்தின் மேலே உங்கள் பார்வை இருப்பது நன்மை தரும். மாதம் ஒருமுறையாவது ஒருதருக்காவது அன்னதானம் செய்யுங்கள்.

உங்கள் ராசிப்படி அருகிலுள்ள் கோவிலில் ஹோமம், யோகம் நடந்தால் அவர்கள் அனுமதியுடன் அத்திமரசமித்தை வாங்கிக் கொடுங்கள். வழிபாடு முடிஞ்சவுடன் யாக சாம்பலை வாங்கி வெண்பட்டுத்துணியில் முடிஞ்சு வீட்டுப்புஜை அறை, பணம் வைக்கும் இடம், வர்தக நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமைகளில் அதற்கு தூபம் காட்டி வழிபடுதல் நன்று. திருஷ்டி தோசங்களைத் தடுத்து லக்மி உங்கள் வீடு தேடி வருவாள்.

உங்கள் ராசிப்படி உங்களிற்கு அதிஸ்டத்தை அள்ளித்தரும் நிறம் இளம் நீலம். அதற்காக நீல நிற ஆடைதான் போட வேண்டும் என்றில்லை. நீங்கள் கொண்டு செல்லும் பேசிலோ, பாக்கிலோ நீல நிற சிறிய துணியினை வைத்தாலே போதும்.

உங்களிற்கு அதிஸ்டம் தரும் நாளாக திங்கட்கிழமை அமைகிறது. அன்று நீங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவது நன்மையைத் தரும்.

விருட்சிகம்

Viruchagam

விருட்சிகபராசி அன்பர்களே! செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். இந்த ஆண்டு உங்கள் ஜென்ம ராசியிலே சனிபகவான் இருக்கிறதும் செவ்வாய் சனிக்குப் பகை கிரகம் என்பதும் உண்மைதான். ஆனால் உங்களிற்கு பாதகம் எதுவும் வராதபடி அந்த செவ்வாய்கிரக ஆதிக்கமே தடுக்கும். நீங்கள் முயற்சிகளில் மட்டுமே சாதகமாக இருந்தாலே போதும். அதிஸ்டம் உங்களைத் தேடி வரும் பிடிவாதம், முன்கோபம் தவிர்த்துக் கொண்டால் நல்லது.

நீங்கள் தூங்கி எழுந்ததும் அனுமன் படத்தை தரிசனம் பண்ணுவது நன்மை தரும். ஒரு வாரம் ஒரு முறையாவது ஒருவருக்காவது அன்னதானம் பண்ணுதல் வேண்டும் துவரை கலந்த உணவை பரிமாறுவது நன்மை தரும்.

உங்களிற்கு அருகிலுள்ள் கோவிலில் கும்பாபிஷேகம் மாதிரியான நிகழ்ச்சிகள் நடந்தால் உங்களால் முடிஞ்ச அளவு கருங்காலி சமித்தை அவர்களின் அனுமதியுடன் வாங்கிக்கொடுங்கள் பூஜை முடிந்ததும் அந்த யாக சாம்பலை கொஞ்சம் வாங்கி சிவப்பு நிறத்துணியில் சுற்றி வீட்டு பூஜை அறையிலோ அல்லது வர்தக இடத்திலோ வைத்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தீபம் காட்டி ஆராதனை செய்தல் வேண்டும். உங்கள் அதிஸ்டம் உங்களைத் தேடி வரும் பணவரவும் சீராகக் கிடைக்கும்.

உங்கள் அதிஸ்ட நிறமாக ஆரஞ்சுக்கலர் அதுக்காக எல்லாநாளும் ஆரஞ்சுக்களரில் தான் ஆடை அணியவேண்டுமென்றில்லை. ஆரஞ்சுக்களறிலே ஒரு சிறிய துணியினை நீங்கள் கொண்டுதிரியும் பாக்கிலோ பேர்சிலோ கொண்டு திரிதல் நல்லதாகும்.

உங்கள் ராசிப்படி ஞாயிற்றுக்கிழமையே அதிஸ்ட நாளாக திகழ்கிறது. நீங்கள் இந் நாளிலே நன்மை பயக்கும் காரியங்களைச் செய்யலாம்.

தனுசு

Thanusu

தனுசு ராசி அன்பர்களே! குருவின் ஆதிக்கத்திலே பிறந்தவர்கள் நீங்கள் வரும் அதிஸ்டத்தை வரவேற்று வளமாகவும் நலமாகவும் வாழ சில குறிப்புகள் இந்த வருடம் உங்களிற்கு முழுக்க முழுக்க நன்மை பயக்கும் நாளாகவே இருக்கிறது.

நீங்கள் விழித்தெழுந்ததுமே திருச்செந்தூர் முருகன் படத்தை பார்த்து எழும்புவது நன்மையாகும் அவன் அருளாலே உங்கள் வாழ்க்கை செழிப்பாகும். தினசரி உணவில் சிறிதளவு கொண்டக்கடலையை மற்றவர்களிற்கு விநயோகம் பண்ணுங்கள்.

உங்கள் அருகிலிருக்கும் ஆலயத்தில் யாகம் ஹோமம் செய்தால் குருவின் சம்மதத்துடன் அரசு சமித்தை வாங்கிக் கொடுங்கள். வழிபாடு முடிந்ததும் அதன் சாம்பலை எடுத்து மஞ்சள் நிறத் துணியால் சுத்தி பூஜை அறையிலோ வர்தக நிலையத்திலோ வைத்து வெள்ளிக்கிழமைகளில் தீபம் காட்டுதல் வேண்டும் பணவரவுத் தடை நீங்கும்.

இந்த ஆண்டின்படி உங்களிற்கு அதிஸ்ட நிறமாக இளம்பச்சை நிறம் அமைகின்றது. அதற்காக பச்சை நிற ஆடை தான் அணிய வேண்டும் என்றில்லை. பச்சை நிறத்தில் சிறு துணியை எடுத்து பாக்கில் கொண்டு சென்றால் நன்மை உண்டாகும்.

உங்களிற்கான அதிஸ்ட நாளாக புதன்கிழமை அமைந்துள்ளது. நினைத்த காரியத்தை இந்த நாளில் செய்தால் நன்மை உண்டாகும்.

மகரம்

Magaram

மகர ராசி அன்பர்களே! உங்களிற்கு சனிப் பெயர்ச்சி சாதகமாக உள்ளது. முன்கோபம், பழிவாங்கும் உணர்ச்சி, சோம்பல் இதெல்லாம் தவிர்தாயே அதிஸ்டம் உங்களைத் தேடி வரும்.

காலையில் எழுந்ததும் ஸ்ரீரங்கம் ரங்கநாதனைப் பார்த்து எழும்புவது நல்லது தினமும் தரிசித்து வந்தால் உங்களிற்கு ரம்மியமாகவே இருக்கும்.

காலை உணவில் எள் சேர்பது நல்லதாகும் வாரத்தில் ஒரு முறையாவது எள்கலந்த உணவை தானம் பண்ணினால் உங்களிற்கு வரும் அதிஸ்டம் நழுவிப் போகாது.

உங்களிற்கு அருகிலுள்ள கோவிலில் யாகம், பூஜையின் பொது வன்னி மர சமித்தை இயன்ற அளவு வாங்கிக் கொடுங்கள். பூஜை முடிந்ததும் ஹோம பஸ்மத்தை (யாக சாம்பல்) வாங்கி வந்து கருநீலத் துணியில் சுற்றி வீட்டின் பூஜை அறையிலோ அல்லது வர்தக நிலையத்திலோ வைத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் தீபம் காட்டி வந்தால் நன்மையே உண்டாகும்.

உங்களிற்கு இராசியான நிறமாக வெள்ளை நிறம் அமைகின்றது. அதற்காக வெண்நிற இடை தான் ஒவ்வொருநாளும் அணிய வேண்டியதில்லை வெள்ளை நிறத் துணியின் சிறு துண்டை உங்கள் பாக்கில் கொண்டு செல்லுங்கள் அதிஸ்டம் உண்டாகும்.

உங்களிற்கு அதிஸ்டம் தரும் நாள் வெள்ளிக்கிழமையே ஆகும். என்ன சுபகாரியத்தையும் இந்தநாளில் செய்து கொள்ளலாம்.

கும்பம்

Kumbam

கும்பராசி அன்பர்களே! சனி பத்தாமிடத்தில் பாக்ய ஸ்தானத்தில் இருக்கிறதால் அதிஸ்ட வாய்பே இல்லை என நீங்கள் நினைக்கலாம் ஆனால் பிற கோள்களின் ராசிப்படி நிச்சயம் அந்த வாய்ப்பு உங்களிற்கு உண்டு.

நீங்கள் தினமும் காலையில் திருவக்கரை வக்ரகாளி படத்தில் விழிச்சு எழுகிறது அதிஸ்டத்தை தரும் திருநாளாகவும் அமையும்.

உங்கள் உணவில் கருப்புக் காராமணியை சேர்ப்பது நல்லது சனிக்கிழமைகளில் இயன்ற அளவு கருப்புக் கராமணி சுண்டக்கடலையை வாரம் ஒரு முறை பிறருக்கு விநியோகம் செய்யறது நல்லது.

உங்களிற்கு பக்கத்தில் உள்ள கோயிலில் யாகம், ஹோமம் நடைபெற்றால் உங்களால் முடிந்தவரை வன்னி மர சமித்தை வாங்கிக் கொடுங்கள் பூஜை முடிந்ததும் ஹோம பஸ்மத்தை நீல நிறத்துணியில் கட்டி வீட்டித் தலை வாசலில் கட்டி விடுங்கள் ஆதாயம் கிடைக்கும்.

இந்த ஆண்டு உங்களின் அதிஸ்ட நிறமாக சிவப்பு ஆகும். உங்களிற்குரிய அதிஸ்ட நாள் செவ்வாய்க்கிழமையாகும்.

மீனம்

Meenam

மீன ராசி அன்பர்களே! குருவின் ஆதிக்க ராசியில் பிறந்தவர்கள் கூட நட்பும் வேண்டா வாதமும் தவிர்த்தால் நல்லது. அதிஸ்டம் நிலைத்து நிற்கும்.

தினமும் காலையில் கண்விழித்ததும் தினமும் மந்திராலயா மகானோட படத்தைப் பார்க்கின்றதை வழக்கமாக்குறது நல்லது. விழித்தெழும் எல்லாம் விசேஷ நாளாகவே இருக்கும்.

வாரம் ஒருமுறையாவது உணவில் கொண்டக் கடலையை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஒரு வாரம் ஒருமுறையாவது பிறருக்கு கடலையை விநயோகம் செய்தால் சீரான ஆரோக்கியம் நிலைக்கும்.

உங்களிற்கு அருகிலுள்ள கோவிலில் யாகம், ஹோமம் நடந்தால் அங்கே அனுமதி வாங்கி அரசமரசமித்தை உங்களால் இயன்ற அளவு வாங்கி குடுத்தல் வேண்டும். பூஜை முடிந்ததும் ஹோம சாம்பலை எடுத்து மஞ்சள் துணியில் கட்டி பூஜை அறையில் வைத்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் தூபம் காட்டி வணங்கினால் நினைச்ச காரியம் நிறைவேறும்.

உங்களிற்கு அதிஸ்டம் தரும் நிறமாக இளஞ்சிவப்பு தான். உங்களிற்கு அதிஸ்ட நாளாக வியாழக்கிழமையே ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus