Home » Cinema News » 16 வயதினிலே படத்தில் வேலை பார்த்தது என் பாக்கியம்: டைரக்டர் பாக்யராஜ்

16 வயதினிலே படத்தில் வேலை பார்த்தது என் பாக்கியம்: டைரக்டர் பாக்யராஜ்

16 வயதினிலே’ படத்தில் பாரதிராஜா உதவியாளராக வேலை பார்த்தது என் பாக்கியம் என்று பாக்யராஜ் கூறினார்.

எம்.மருது பாண்டியன் இயக்கிய ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் டைரக்டர் பாக்யராஜ் பங்கேற்று பேசியதாவது:–

16 வயதினிலே படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். பாரதிராஜா எப்போதும் சீன்களை பற்றியே யோசித்துக் கொண்டு இருப்பார். அடிக்கடி என்னிடம் அடுத்த சீன் என்ன என்று கேட்டுக் கொண்டே இருப்பார். அவரிடம் நிறைய கற்றேன்.

ஒருநாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு பிலிம் ரீல்களை எனது அறையில் வைத்து இருந்தனர். எனக்கு அப்போது சினிமாவை பற்றி தெரியாது என்பதால் அந்த பிலிம் பெட்டியை திறந்தால் கமல், ஸ்ரீதேவியை அதில் பார்க்கலாம் என்று நினைத்தேன். அதை திறக்கவும் ஆயத்தமானேன். அப்போது பாரதிராஜா அங்கே வந்து விஷயம் தெரிந்து பதறிபோய் என்னை தடுத்தார். அந்த படத்தில் பாரதிராஜா உதவியாளராக பணியாற்றியது என் பாக்கியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

டைரக்டர் பாரதிராஜா பேசும்போது, ‘‘சென்னை நான்கு மொழிக்காரர்களை வாழ வைத்து இருக்கிறது. சினிமாவில் முன்பு நுழைவது கஷ்டம். இப்போது ஈஸியாக இருக்கிறது. பெரிய கோட்டைகளை உடைத்துதான் நாங்கள் உள்ளே வந்தோம். சினிமா கனவு பூமி. இங்கு பாராட்டுக்களை வாங்கி கொள்ளலாம். தலையில் ஏற்றிக் கொள்ள கூடாது’’ என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி, டைரக்டர் பேரரசு, தயாரிப்பாளர் டி.மதுராஜ் ஆகியோரும் பேசினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus