Home » Cinema News (page 30)

Cinema News

லிங்கா முதல் நாள் திரைஅரங்கு வசூல் ரிப்போர்ட்

lingaa011

சூப்பர் ஸ்டார் நடிப்பில் நேற்று வெளியான லிங்கா திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது. நமக்கு கிடைத்த தகவல்படி உலகம் முழுவதும் 2800 திரையரங்குகளில் வெளியாகி ரூ. 30 கோடி வரை வசூல் செய்து உள்ளதாம், தென்னிந்திய வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று கூறப்படுகிறது. அதே சமயம் தமிழ்நாட்டை பொறுத்த வரை 600 திரைஅரங்குகளில் ரிலீஸ் ஆகி சுமார் 16.5 கோடி வசூல் ஆகியுள்ளதாம். இந்த ஸ்பீடில் போனால் இன்னும் 7, 8 நாட்களில் ரூ. 100 கோடியை தாண்டி ...

மேலும் சில... »

ஹிருத்திக் ரோஷனுக்கு இரண்டாவது திருமணமா?

hrithik_roshan001

தன்னுடைய அசாதாரமான நடிப்பாலும், துள்ளலான நடனத்தாலும் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஹிருத்திக் ரோஷன். இவருக்கும் நடிகர் சஞ்சய் கான் மகள் சுசானாகானுக்கும் 2000–ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரேகான், ரிதான் என இரு மகன்கள் உள்ளனர். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சமீபத்தில் தான் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், ஹிருத்திக் ரோஷன் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வந்திருக்கிறது. ஆனால் ஹிருத்திக்கை திருமணம் செய்து கொள்ள போகும் அந்த பெண் யார் ...

மேலும் சில... »

ரியல் எஸ்டேட் அதிபராக மாறிய விக்ரம் பிரபு

vellakkara_durai001

மதுரை சேர்ந்த அன்பு செழியன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தவர் . இவர் தனது ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ நிறுவன்ம் சார்பில் முதன் முதலாக தயாரித்துள்ள படம் ‘வெள்ளக்கார துரை’. இப்படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்க, இவர்களுடன் சூரி, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ‘ஆடுகளம்’ நரேன் முதலானோரும் நடித்துள்ளனர். பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள எழில் இயக்கும் 9-ஆவது படம் இது. ‘வெள்ளக்காரதுரை’ குறித்து இயக்குனர் எழில் கூறும்போது, ‘‘விக்ரம் பிரபு வில்லேஜ் சப்ஜெக்ட்டில் நடிக்கும் முதல் படம் இது. ...

மேலும் சில... »

அதாரு உதாரு அஜித்தின் அறிமுக பாடல் கிடையாது – ருசிகர செய்தி

yennai_arindhal004

தல அஜித் நடிக்கும் என்னை அறிந்தால் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் டீசருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து படத்தின் ஒரு பாடலான அதாரு உதாரு பாடலை நேற்று வெளியிட்டனர். ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தாலும் பொதுவானவர்கள் தல அறிமுக பாடல் சுமார் ரகம் என்று கூறி வந்தனர். இந்நிலையில் ட்விட்டரில் ஒரு ரசிகர் இது அஜித்தின் அறிமுக பாடலா என்ற கேள்வி எழுப்பி ஹாரிஸிடம் பதிலும் பெற்று விட்டார். அதாவது ரசிகர்கள் நினைக்கிற மாதிரி அதாரு உதாரு பாடல் அஜித்தின் ...

மேலும் சில... »

மனித வாழ்க்கையை சாதனையாக்கிய சேரன்

001

தமிழ் சினிமாவின் கலாச்சாரத்தை தமிழகர்களுக்கு எடுத்துரைத்தவர் தான் சேரன். தன் ஒவ்வொரு படைப்பையும் அவர் இயக்கவில்லை, செதுக்கினார் என்று சொன்னால் கூட மிகையல்ல. கிராமங்களாக இருக்கட்டும், நகரங்களாக இருக்கட்டும் அனைத்தையும் உண்மையாகவும், நேர்மையாகவும் நம் கண்முன் கொண்டு வந்து பிரதிபலித்தவர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்து ஒரு கமர்ஷியல் இயக்குனராக வருவார் என அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில் தன் முதல் படமே அறியாமையை சாதி வெறியையும் கூண்டோடு அழிக்கும் பாரதி கண்ணம்மா என்ற படைப்பை கொடுத்தார். தமிழ் மக்கள் அனைவரும் வெளி நாடு ...

மேலும் சில... »

நாளை ஐ பட ரசிகர்களுக்கு விருந்து

i001

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருந்து வரும் படம் ஐ. விக்ரம், எமி ஜாக்சன் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி இதுவரை 9 மில்லியன் ரசிகர்கள் யூடியூபில் பார்த்துள்ளனர். டீஸரிலேயே சாதனை படைத்த ஐ படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக படத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதோடு டிரைலரின் நேரம் 2 நிமிடம் என்று கூறியுள்ளனர்.

மேலும் சில... »

ரஜினிகாந்த் பிறந்த நாள்: இ.போஸ்ட் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்

rajinikanth

மின்னணு அஞ்சல் வசதி (இ.போஸ்ட்) மூலம் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல்துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளன்று (டிசம்பர் 12) ரசிகர்கள் மின்னணு அஞ்சல் வசதி மூலம் வாழ்த்து தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளை அஞ்சல் துறை மேற்கொண்டுள்ளது. முக்கிய அஞ்சல் நிலையங்களில், மின்னணு அஞ்சல் வசதிகளை ரசிகர்கள் பெறமுடியும். ரசிகர்கள் தங்கள் பெயருடன் ரஜினிகாந்த், அபிராமபுரம் அஞ்சல், சென்னை-18 என்ற முகவரியிட்டு ...

மேலும் சில... »

திடீரென பொங்கலுக்கு களமிறங்கும் காக்கி சட்டை!

kakki-sattai-300x179

மான் கராத்தே’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘காக்கி சட்டை’ (டாணா). இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க படத்தை தயாரித்திருக்கிறார் தனுஷ். முதன் முறையாக இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார். படத்தின் இசை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளது. படத்தை வரும் கிறிஸ்துமஸுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இன்றைய நாளிதழ்களில் வெளிவந்துள்ள ‘காக்கி சட்டை’ ...

மேலும் சில... »

சென்னையில் டிச.18-இல் சர்வதேசத் திரைப்பட விழா

ciff

சென்னையில் 12-ஆவது சர்வதேசத் திரைப்பட விழா வருகிற 18-ஆம் தேதி தொடங்கி, 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. “இந்தோ-சினி அப்ரிசியேஷன்’ அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திரைப்பட விழாவில் அமெரிக்கா, ஈரான், இராக், பிரான்சு, துருக்கி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 46 நாடுகளைச் சேர்ந்த 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தியாவின் சார்பில் முக்கியத்துவம் பெற்ற பல படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன. “குற்றம் கடிதல்’, “சலீம்’, “என்னதான் பேசுவதோ’ உள்ளிட்ட 12 தமிழ்ப் படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன. சென்னையில் ...

மேலும் சில... »

தனுஷை கவர்ந்த ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’!

dhanush_impress001

தனுஷ் தற்போது மாரி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். தமிழகத்தில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ வசனம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், மேலும் அக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus