Home » Education News (page 4)

Education News

பிப்.,5 ல் பிளஸ் 2 அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை பொதுத்தேர்வு

03THSCHOOL_911494f

ராமநாதபுரம்: பிளஸ் 2 அறிவியல் பாட மாணவர்களுக்கு பிப்.,5 ல் செய்முறை பொதுத்தேர்வு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5ல் துவங்குவதாக அட்டணை வெளியிடப்பட்டுள்ளது. அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில், செய்முறை பொதுத்தேர்வுகள் பிப்., 5ல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மாணவர்கள் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என கல்வி அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் சில... »

இந்திய மருத்துவக் கவுன்சில், 250 மாணவர்களை எம்.எம்.சி.,யில் சேர்க்க அனுமதி..

download (1)

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியான – எம்.எம்.சி.,யில், வரும் கல்வியாண்டில், 250 மாணவர்களை சேர்க்க, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி, 179 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 2012 வரை, எம்.பி.பி.எஸ்., படிப்பில், 165 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். 2013 – 14 முதல், மாணவர் சேர்க்கையை, 250 ஆக உயர்த்த அனுமதி கிடைத்தது. இரு ஆண்டுகளாக, 250 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மாணவர் சேர்க்கையை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். இக்கல்லூரியில், போதிய வசதிகள் உள்ளதா என்பது குறித்து, ...

மேலும் சில... »

டி.ஆர்.பி – 2013 டி.இ.டி தேர்வு சான்றிதழைப் பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை அணுகலாம்

TN TET RESULT 2013

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ.,வை அணுகலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் – டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: டி.ஆர்.பி.,யால், 2012 – 13ல் நடத்தப்பட்ட, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து, பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டனர். சரியான முறையில் பதிவிறக்கம் ...

மேலும் சில... »

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கற்றல் அறிவுத் திறன் தொடர்பாக ஆய்வு…

IMG_2676

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் எப்படி படிக்கின்றனர்; பாடங்களை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்(என்.சி.இ.ஆர்.டி.,), மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில், வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆய்வு நடத்தப்படுகிறது. மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் ஆய்வு நடக்கும். இதற்கான பொறுப்பு, தேர்வுத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கான கேள்வித்தாள்களை, தேசிய கல்வி ...

மேலும் சில... »

மாநில கேரம் போட்டியில் ஊராட்சிப் பள்ளி மாணவியர் 2ம் இடம் பிடித்து சாதனை!

index

மாநில அளவில் நடந்த கேரம் போட்டியில், ஊராட்சிப் பள்ளி மாணவியர், இரண்டாம் இடம் பிடித்து சாதனை புரிந்தனர். மாநில அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியரின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்க பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மாவட்ட அளவில், கேரம் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட அளவில் நடந்த கேரம் போட்டியில், முதலிடம் பிடித்த மாணவர்கள், மாநில போட்டிகளில் பங்கேற்கும் ...

மேலும் சில... »

குரூப் – 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

28403

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் – 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உட்பட, உயர்நிலை பணிகளுக்காக, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் – 1 தேர்வு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான – யு.பி.எஸ்.சி., நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வுக்கு இணையானது. தற்போது, குரூப் – 1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 35 ஆக உள்ளது. இந்த ஆண்டிற்கான குரூப் – ...

மேலும் சில... »

ஒபாமா வருகையின்போது அமெரிக்க வல்லுனர்கள் பாடம் நடத்துவது குறித்த உடன்பாடு?

28405

இம்மாதம் 25ல், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வரும்போது, இந்திய உயர்கல்வி நிலையங்களில், அமெரிக்க வல்லுனர்கள் பாடம் நடத்துவது குறித்த உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, ஐ.ஐ.டி., – ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில், 15 நாட்கள் அல்லது 20 நாட்கள், அமெரிக்க வல்லுனர்களை உரையாற்றச் செய்வது, அதற்காக, அதிகபட்சம் ஏழு லட்சம் ரூபாய் வரை வழங்குவது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 1,000 அமெரிக்க வல்லுனர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ...

மேலும் சில... »

உள்கட்டமைப்பு வசதி இல்லாத நுாலகங்களால் புதிய புத்தகங்களை பயன்படுத்த முடியாத நிலை

28404

மாநிலத்தில் உள் கட்டமைப்பு வசதி இல்லாத நுாலகங்களால், புதிய புத்தகங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாசகர்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் 32 மாவட்ட மைய நுாலகங்கள் உள்பட 3000 கிளை நுாலகங்கள் உள்ளன. தற்போது கிராமங்களில் இருந்து நகரம் வரை நுாலகத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகள், பணி நிறைவு பெற்றோர் ஆகியோருக்கு புகலிடமாக உள்ளது. ஆண்டுதோறும் பொது நுாலக துறை இயக்ககம் சார்பில் மாநகராட்சி பகுதிகளில் 70 ஆயிரம் புத்தகங்கள், நகராட்சி பகுதிகளில் 80 ...

மேலும் சில... »

டி.ஆர்.பி. தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் 94.41% பேர் தேர்வெழுதினர்

tnpc_739076f

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., நடத்திய, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில், 11,291 பேர் பங்கேற்கவில்லை. 94.41 சதவீதம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். தமிழகம் முழுவதும், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களில், 20,02,257 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும், 499மையங்களில் இத்தேர்வு நேற்று நடந்தது. சென்னையில், 34 மையங்களில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, அனைத்து மையங்களிலும் ...

மேலும் சில... »

விண்வெளியில் சாதனை!… ஆனால் சுற்றுச்சூழலில்?: விஞ்ஞானி வேதனை

28296

ஊமச்சிகுளம்: “ஐரோப்பிய நாடுகளின் செயற்கைக் கோள்களை இந்திய ராக்கெட்டுகள் மூலம் விண்ணுக்கு செலுத்தும் வகையில் அறிவியலில் வளர்ச்சி பெற்றாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பின்தங்கி உள்ளோம்” என மதுரை யாதவர் கல்லூரி கருத்தரங்கில் இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் தெரிவித்தார். மத்திய தொழில்நுட்பத் துறை சார்பில் தண்ணீர், சுத்தம், சுகாதாரம் குறித்த அறிவியல் கண்காட்சி நடந்தது. இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் பேசியதாவது: செயற்கைகோள்களை செலுத்த வெளிநாடுகளை தேடிச் சென்ற நிலை மாறி, ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் செயற்கைக் கோள்களை நம் ராக்கெட்டுகள் மூலம் விண்ணுக்கு செலுத்துகிறோம். இந்தியா ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus