Home » News (page 612)

News

சென்னையில் 5 இடங்களில் ‘அம்மா’ திரையரங்கம்!

Theater-300x167

சென்னையில் ஐந்து இடங்களில் அம்மா திரையரங்குகள் தொடங்கப்பட உள்ளன. ஒரே நேரத்தி்ல் 250 பேர் பார்க்கும் வசதியுடன் திரையரங்குகள் அமைக்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ‘அம்மா’ திரையரங்குகளை அமைக்க சென்னை மாநகராட்சியில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் திரையரங்குகள் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து, பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் திரையரங்குகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடத்தில் திரையரங்குகள் கட்டுவது தொடர்பாக நிபுணர்கள் ஆய்வு ...

மேலும் சில... »

தமிழகம் முழுவதும் பரவலாக மழை: அணைகளில் நீர் மட்டம் உயர்வு

2.-Amaravathi-Dam-266x200

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குமரி மாவட்டத்தில் பெருஞ்சாணி, பத்துக்காணி, ஆறுகாணி உள்ளிட்ட மலையோர கிராமங்களில் தொடர் மழை பெய்தது. இதனால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மாம்பழத்து உள்ளிட்ட அணைகளில் நீட்டம் அதிகரித்து வருகிறது. திற்பரப்பு அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டம் குப்பக்கா ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் லிங்கமநாயக்கன்பட்டி, நடுவூர், சொக்கலாபுரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நடுவூர் ...

மேலும் சில... »

5 போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியா வந்தது இலங்கை அணி!

cricket-600

மும்பை: இந்தியாவுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. ஏஞ்சலே மாத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி மும்பைக்கு வந்து சேர்ந்தது. விமான நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்து மூலம் இலங்கை அணியைச் சேர்ந்த வீரர்களும், நிர்வாகிகளும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாதியிலேயே கிளம்பிப் போய் விட்டதால் நிலைமையைச் சரிக்கட்டவும், விட்ட பணத்தை எடுக்கவும் இலங்கையைக் கூப்பிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்தியாவே கூப்பிட்டு விட்டதே என்பதற்காக எல்லா வேலையையும் போட்டு விட்டு ஓடி ...

மேலும் சில... »

“என் ‘கதை’ முடியும் நேரம் இது”.. யுவராஜ் சிங்!

30-1414660916-yuvraj-singh7-600

டெல்லி: மறுபடியும் நான் இந்திய அணிக்காக ஆடுவேன் என்று நினைக்கவில்லை என்று சோகமாக கூறுகிறார் யுவராஜ் சிங். அதேசமயம், நான் எனது இடத்திற்காக போராடுவேன், விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இத்தனைக்கும் 2011 உலகக் கோப்பைப் போட்டியின்போது போட்டித் தொடர் நாயகன் பட்டத்தைப் பெற்றவர் யுவராஜ் சிங். இந்தியா உலகக் கோப்பையைப் பெற முக்கியப் பங்கு வகித்தவரும் கூட. ஆனால் 2015 உலகக் கோப்பைப் போட்டியில் இவர் இந்திய அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இடத்திற்காக ...

மேலும் சில... »

கறுப்பு பண விசாரணை அறிக்கை எப்போது தாக்கல்?

mb_shah

கறுப்பு பண விவகாரத்தில் விசாரணை அறிக்கை சரியான நேரத்தில் சமர்பிக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு குழுத் தலைவரும் நீதியரசருமான எம்.பி.ஷா தெரிவித்துள்ளார் . இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருப்பு பணம் விவகாரத்தில் விசாரணை என்பது எளிதானது இல்லை என்றார். கறுப்பு பண விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நடத்தும் விசாரணை வெறும் கண்துடைப்பு என்பதை எம்.பி.ஷா மறுத்தார். உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதன் மூலம், சில நல்ல முடிவுகள் கிடைத்திருப்பதாகவும் எம்.பி. ஷா தெரிவித்தார்.

மேலும் சில... »

தமிழக அரசியலில் புதிய அணி உருவாகிறதா?

stalin_vaiko

பாமக நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண நிகழ்ச்சி, தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்டுள்ளது. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் – வைகோ சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற ராமதாசின் இல்ல திருமண நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். விழா மேடைக்கு அவர் சென்ற சில நிமிடங்களில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அங்கு சென்றார். பாமக நிறுவனர் ராமதாசுடன் சிறிது நேரம் அவர் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். பின்னர், விருந்து நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினும், வைகோவும் ...

மேலும் சில... »

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ.3 உயர்வு

மானிய விலையில் கிடைக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம், டீலர்களுக்கான கமிஷன் தொகை 3 ரூபாய் உயர்த்தி, சிலிண்டர் ஒன்றிற்கு 43 ரூபாய் 71 காசுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து சில்லறை விற்பனையில் கிடைக்கும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் படி, டெல்லியில் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர், 417 ரூபாய்க்க்கும், மும்பையில், 452 ரூபாய்க்கும்  விற்பனையாகும்.

மேலும் சில... »

கானிமேட் நிலவின் கைங்கரியத்தால் ஒரு நிமிடம் “சந்திரமுகி”யாக மாறிய ஜூபிடர்!

jupiter

வாஷிங்டன்: ஜூபிடர் கிரகமானது, பெரிய கண்ணுடன் நம்மை உற்று நோக்கிப் பார்த்தால் எப்படி இருக்கும்… அதேபோல ஒரு “கண்”ணுடன் கூடிய ஜூபிடர் கிரகத்தை ஹப்பிள் தொலைநோக்கிப் படம் பிடித்து அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி அனுப்பியுள்ள இந்தப் படத்தில் பெரிய கண்ணுடன், அதுவும் நமது பூமியைப் பார்ப்பது போன்ற தோற்றத்துடன் ஜூபிடர் கிரகம் காணப்பட்டது. சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கிரகம் ஜூபிடர்தான். இதன் சமீபத்திய படம் ஒன்று பெரும் ஆச்சரியகரமானதாக உள்ளது. ஜூபிடரில் புயல்: ஜூபிடர் கிரகத்தில் வீசி வரும் ...

மேலும் சில... »

வாட்ஸ்அப் நிறுவனத்தால் நஷ்டத்தை சந்திக்கும் பேஸ்புக்!!!

facebook

சான் பிரான்சிஸ்கோ: சமுக வலைதளத்தில் புரட்சியை உருவாக்கிய பேஸ்புக் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டின் வருவாயில் சுமார் 59 சதவீத உயர்வை சந்தித்துள்ளது. ஆனால் தன் வளர்ச்சியை அழித்துவிடும் என்று பயந்து வாட்ஸ் அப் நிறுவனத்தை அதிக விலைக் கொடுத்து பேஸ்புக் நிறுவனம் கைபற்றியது. இதன் விளைவு கைபற்றிய நிறுவனத்தில் நஷ்டம். 3வது காலாண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் 59% வளர்ச்சியுடன் 3.2 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ...

மேலும் சில... »

சமந்தாவை நம்பி போகலாமா… தயக்கத்தில் தமன்னா!

Samantha Tamanna

ஒரே நேரத்தில் ஃபீல்டில் முன்னணியில் இருக்கும் இரு நடிகைகள் சேர்ந்து பணியாற்றுவதே வெகு அரிது.. அதிலும் ஒரு நடிகையை வைத்து இன்னொரு நடிகை படம் தயாரிக்க முன் வருகிறார் என்றால் சாதாரண விஷயமா… அப்படி ஒரு விஷயம் தெலுங்கில் நடந்தது. இந்தியில் வென்ற குயீன் படத்தை ரீமேக் செய்ய விரும்பினார் சமந்தா. தயாரிப்பாளராக மட்டும் இருந்து கொண்டு, வேறு நடிகையை ஹீரோயினாக்கத் திட்டம். ஆனால் அந்தப் படத்தை தென்னிந்தியாவில் ரீமேக்கும் உரிமைகளை வாங்கிவிட்டார் பிரசாந்த் அப்பா தியாகராஜன். எனவே வேறு ஒரு படம் தயாரிக்கத் ...

மேலும் சில... »
Visit Us On FacebookVisit Us On Google Plus