Home » Cinema News » இளவரசன்-திவ்யா காதல் கதை படமாகிறது?

இளவரசன்-திவ்யா காதல் கதை படமாகிறது?

a4519028-c9be-4496-8c6b-118d35592bdd_S_secvpf.gifதர்மபுரியில் பரபரப்பை கிளப்பிய இளவரசன்-திவ்யா காதல் கதையை மையமாக வைத்து ஒரு புதிய படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. ‘இலக்கணம் இல்லா காதல்’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிக்கும் நாயகனின் பெயர் இளவரசன், நாயகியின் பெயர் திவ்யா என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் இளவரசன்-திவ்யா காதல் கதையைத்தான் படமாக எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், ‘வாச்சாத்தி’ என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘வாச்சாத்தி’ என்னும் படத்தை தயாரித்த ஆர்.ரமேஷ் மீண்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரித்து, நடித்து வரும் படம் என்று கூறப்படுவதால் அது மேலும் உறுதியாகிறது.

இப்படத்தில் இளவரசன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ரமேஷும், திவ்யா கதாபாத்திரத்தில் கவிதா என்ற புதுமுகமும் நடிக்கிறார்கள். மேலும், பாரதி, ராதாரவி, நந்தினி, விஜயகுமார், கௌசல்யா, ஜெயமணி, போண்டா மணி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வி.சி.ஜெயமணி.

தீபக்-மணி ஆகியோர் ஒளிப்பதிவை கவனிக்க, வில்லியம்ஸ்-நாகா ஆகியோர் பாடல்களுக்கு இசையமைக்கின்றனர். பின்னணி இசையை அம்சத்வனி கவனிக்கிறார். கவிஞர் பிறைசூடன் பாடல்களை எழுதுகிறார். தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus