Home » Education News » இந்திய மருத்துவக் கவுன்சில், 250 மாணவர்களை எம்.எம்.சி.,யில் சேர்க்க அனுமதி..

இந்திய மருத்துவக் கவுன்சில், 250 மாணவர்களை எம்.எம்.சி.,யில் சேர்க்க அனுமதி..

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியான – எம்.எம்.சி.,யில், வரும் கல்வியாண்டில், 250 மாணவர்களை சேர்க்க, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி, 179 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 2012 வரை, எம்.பி.பி.எஸ்., படிப்பில், 165 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். 2013 – 14 முதல், மாணவர் சேர்க்கையை, 250 ஆக உயர்த்த அனுமதி கிடைத்தது. இரு ஆண்டுகளாக, 250 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

மாணவர் சேர்க்கையை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். இக்கல்லூரியில், போதிய வசதிகள் உள்ளதா என்பது குறித்து, கடந்த அக்., 27, 28ம் தேதிகளில், எம்.சி.ஐ., குழு, கல்லூரியில் ஆய்வு நடத்தியது. இந்த அறிக்கை, எம்.சி.ஐ.,யில் சமர்ப்பிக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்த, எம்.சி.ஐ., செயற்குழு கூட்டத்தில், வரும் கல்வியாண்டிலும், 250 மாணவர்களை சேர்க்க, சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. 2015 – 16லும், 250 மாணவர் சேர்க்கப்படுவர் என, முதல்வர் விமலா தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், கூடுதல் இடங்களுக்கு அனுமதி குறித்து, எம்.சி.ஐ., குழு ஆய்வு முடித்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதற்கான அனுமதியும், விரைவில் கிடைக்கும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus