Home » Indian News » அதிகாரிகள் பேச்சுவார்த்தை – தெலுங்கு கங்கை திட்டத்தில் தமிழகம் ஆந்திராவுக்கு ரூ.573 கோடி கடன் பாக்கி!

அதிகாரிகள் பேச்சுவார்த்தை – தெலுங்கு கங்கை திட்டத்தில் தமிழகம் ஆந்திராவுக்கு ரூ.573 கோடி கடன் பாக்கி!

Ganga-Dam

தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் சென்னைக்கு குடிநீராக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் நிர்வாக செயல்பாடுகளுக்காக இதுவரை ஆந்திராவுக்கு தமிழக அரசு ரூ.573 கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருப்பதாக ஆந்திரா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொகையை செலுத்த கோரி தமிழக அரசுக்கு ஆந்திரா அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதையடுத்து கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி செலுத்தப்பட்டது.

அதேபோல் இந்த ஆண்டும் ரூ.100 கோடி செலுத்த வேண்டும் என்று ஆந்திரா அரசு கூறியது. ஆனால் இந்த ஆண்டு சரிவர தண்ணீர் திறந்து விடாததால் ரூ.25 கோடி மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து இரு மாநில அதிகாரிகள் சந்தித்து இன்று ஐதராபாத்தில் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று தமிழக அரசு தலைமை செயலாளர் ஞானதேசிகன், நிதியமைச்சக செயலாளர் சண்முகம், ஆந்திர அரசு தலைமை செயலாளர் கிருஷ்ணாராவ், நீர்வளத்துறை செயலாளர் ஆதித்யநாத்தாஸ், நிதியமைச்சக செயலாளர் அஜய் கல்லம் மற்றும் முக்கிய அதிகாரிகள் இன்று ஐதராபாத்தில் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus