Home » Cinema News » பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் அஜீத் வழிபாட்டின் போது ரசிகர்கள் முற்றுகை

பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் அஜீத் வழிபாட்டின் போது ரசிகர்கள் முற்றுகை

mankatha_ajith_wallpapers_001

அஜீத்தின் என்னை அறிந்தால் படம் வருகிற 5–ந்தேதி ரிலீசாகிறது. கவுதம்மேனன் இயக்கியுள்ளார். நாயகிகளாக அனுஷ்கா, திரிஷா நடித்துள்ளனர். தியேட்டர்களில் இப்படத்துக்காக டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. நான்கு நாட்களுக்குள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.

என்னை அறிந்தால் படம் ரிலீசாவதை தொடர்ந்து அஜீத் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். நேற்று கேரள மாநிலம் பாலக்காடு சென்று அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். சிறப்பு அர்ச்சசனை செய்து பிரார்த்தனையும் செய்தார்.

பின்னர் கோவிலை சுற்றி வந்துசாமி கும்பிட்டார். அஜீத் கோவிலுக்கு வந்துள்ள தகவல் அறிந்து ரசிகர்களும், பக்தர்களும் திரண்டனர். அவருடன் கை குலுக்க நெருக்கினர். ரசிகர்கள் முற்றுகையால் அஜீத் காருக்கு செல்ல முடியவில்லை. போலீசார் விரைந்து வந்து கூட்டத்தினரை அப்புறப்படுத்தினர். பின்னர் அஜீத் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus