Home » Astro » இன்றைய ராசிப் பலன்கள் 27.01.2015

இன்றைய ராசிப் பலன்கள் 27.01.2015

12_free-astrology-tools-960x440

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களை புரிந்து கொள்ளுங்கள். கணுக் கால் வலிக்கும்.வியாபாரத்தில் வேலை யாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.

ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதக மாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்: சாதிக்க வேண்டு மென்ற தன்னம்பிக்கை வரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். திடீர் திருப்பம் உண்டாகும் நாள்.

சிம்மம்: கணவன்&மனைவிக் குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் தாழ்வு மனப்பான்மையால் மன இறுக்கம் அதிகரிக்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

துலாம்: உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.

விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் களின் ஆதரவுக் கிட்டும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சகோதரி உதவுவார். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்: திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாகனத்தை சீர் செய் வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். தைரியம் கூடும் நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த அலைச்சல், சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத் தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus