Home » Cinema News » திருடன் போலீஸ் டீமின் அடுத்த படைப்பு உள்குத்து

திருடன் போலீஸ் டீமின் அடுத்த படைப்பு உள்குத்து

21d07366-6bb8-4110-b393-441ce7d46d19_S_secvpf.gifகடந்த வருடம் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய படம் ‘திருடன் போலீஸ்’. இதில் தினேஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இவர்களுடன் பாலா, நான் கடவுள் ராஜேந்திரன் நடித்திருந்தார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கார்த்திக் ராஜு இயக்கியிருந்தார்.

தந்தை மகன் உறவை சித்தரிக்கும் கதையம்சம் கொண்டு உருவாகியிருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தில் தினேஷ் திருடனாகவும், போலீஸ்காரனாகவும் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் புதுப்படம் ஒன்று உருவாகவுள்ளது. அதற்கு ‘உள்குத்து’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் நாயகனாக தினேஷ் நடிக்கிறார். மேலும் பாலா, நான் கடவுள் ராஜேந்திரன், ஆகியோர் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் ராஜு இயக்குகிறார். செல்வ குமார் தயாரிக்கிறார்.

இவர்கள் கூட்டணியில் ‘திருடன் போலீஸ்’ படம் போல் ‘உள்குத்து’ படமும் ஹிட்டாகும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus