Home » Sports News » டோனி விலகல்…கிளம்பும் யூகங்கள்: முற்றுப்புள்ளி வைத்த ரவிசாஸ்திரி

டோனி விலகல்…கிளம்பும் யூகங்கள்: முற்றுப்புள்ளி வைத்த ரவிசாஸ்திரி

டெஸ்டில் இருந்து டோனி திடீரென விடைபெற்றதற்கு பல்வேறு விதமான யூகங்கள் கிளம்பின.

கோஹ்லிக்கும், டோனிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும், வீரர்கள் ஓய்வறையில் சரியான புரிந்துணர்வு இல்லாததால் அதிருப்திக்குள்ளானதாகவும், அதன் எதிரொலியாகவே அவர் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பாதியிலேயே விலகியதாகவும் கூறப்பட்டது.

இது பற்றி இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரியிடம் கேள்வி எழுப்புகையில் அவர் கூறியதாவது, டோனி, கோஹ்லி இடையே கருத்துவேறுபாடு, பிளவு இருப்பதாக கூறப்படும் தகவல் அபத்தமானது.

டோனியின் தலைமை மீது விராட் கோஹ்லி மட்டுமல்ல, அணியின் ஒவ்வொரு வீரர்களும், உதவியாளர்களும், நிர்வாகிகளும் எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியாது.

டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி திடீரென சொன்னதும் ஒரு கணம் அனைவரும் திகைத்து போய் விட்டோம். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.

மெல்போர்ன் டெஸ்ட் முடிந்து மைதானத்தில் பேட்டி அளித்து விட்டு அறைக்கு திரும்பியது வரை அவரது முடிவு பற்றி எங்களுக்கு தெரியாது.

அதன் பிறகு விடயத்தை அவர் என்னிடமும், வீரர்களிடமும் அவசரமாக கூறினார். நான் புரிந்து கொண்டது வரை அவர் தனது முடிவு குறித்து குடும்பத்தினரிடம் கூட விவாதிக்கவில்லை.

ஓய்வு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரம். ஆனால் சிறந்த விளையாட்டு ஆட்டக்காரர்களுக்கு, எப்போது வெளியேற வேண்டும் என்பது தெரியும்.

அதன் மீது யாரும் கேள்வி எழுப்ப முடியாது. அவர் 100 டெஸ்ட் மைல்கல்லை கடக்க வேண்டும் என்று காத்திருக்கவில்லை. பிரிவுபசார போட்டி வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. இது தான் அவரது குணாதிசயம்.

அவர் வித்தியாசமான வியப்புக்குரிய ஒரு மனிதர். அவர் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலேயே இருப்பார். ஆனால் இப்போது டெஸ்ட் அணியுடன் அவர் இணைந்திருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus