Home » Education News » உள்கட்டமைப்பு வசதி இல்லாத நுாலகங்களால் புதிய புத்தகங்களை பயன்படுத்த முடியாத நிலை

உள்கட்டமைப்பு வசதி இல்லாத நுாலகங்களால் புதிய புத்தகங்களை பயன்படுத்த முடியாத நிலை


மாநிலத்தில் உள் கட்டமைப்பு வசதி இல்லாத நுாலகங்களால், புதிய புத்தகங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாசகர்கள் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில் 32 மாவட்ட மைய நுாலகங்கள் உள்பட 3000 கிளை நுாலகங்கள் உள்ளன. தற்போது கிராமங்களில் இருந்து நகரம் வரை நுாலகத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகள், பணி நிறைவு பெற்றோர் ஆகியோருக்கு புகலிடமாக உள்ளது.

ஆண்டுதோறும் பொது நுாலக துறை இயக்ககம் சார்பில் மாநகராட்சி பகுதிகளில் 70 ஆயிரம் புத்தகங்கள், நகராட்சி பகுதிகளில் 80 ஆயிரம் புத்தகங்கள் மாவட்ட மைய நுாலகங்களுக்கு வந்து சேரும். இங்கிருந்து கிளை, ஊர்புறம், பகுதி நேர நுாலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

2013 வரை சில ஆண்டுகள் புதிய புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படாமல் இருந்தது. கடந்த ஆண்டில் இருந்து புதிய புத்தகங்கள் வரத்து துவங்கியுள்ளன. இவைகள் அந்தந்த கிளை நுாலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆனால் புதிய புத்தகங்களை வாசகர் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக அடுக்கி வைப்பதற்கு நுாலக அடுக்குகள் போதுமான அளவு இல்லை. மேலும் பெரும்பாலான கிளை நுாலகங்கள், நுாலக அடுக்கு வைப்பதற்கும், வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கும் போதிய இட வசதி இல்லாமல் உள்ளது.

இதனால் பல மாதங்கள், மாவட்ட மைய நுாலகத்தில் காத்திருந்த புத்தகங்கள் தற்போது, கிளை நுாலகங்களில் காத்திருக்கிறது. இதனால் வாசகர்கள் புதிய புத்தகங்களை படித்து பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்கும் நுாலகங்களில் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி நவீனபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Visit Us On FacebookVisit Us On Google Plus